×

ராமின் ஏழு கடல் ஏழு மலை டீசர் வெளியானது

 

சென்னை: இயக்குநர் ராமின் ‘ஏழு கடல், ஏழு மலை’ பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘கற்றது தமிழ், ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’. ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமான நிவின் பாலி இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் 53-வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகி இருக்கிறது. இந்நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் துவக்கத்தில், ‘ஒருத்தர விட்டு ஒருத்தர் போறதுக்கு வேணா ஆயிரம் காரணம் இருக்கும். ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். அது காதல்’ என்ற வசனத்துடன் காட்சிகள் துவங்குகிறது. இது பூர்வ ஜென்ம கதையாக இருக்கலாம் என்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.

The post ராமின் ஏழு கடல் ஏழு மலை டீசர் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Ram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி